தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

ஐபிஎல் போட்டி: நாளை மத்திய தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகளுக்கு வாய்ப்பு

அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, புதன்கிழமை (ஏப்ரல் 8) மத்திய தில்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு

News image

ஐபிஎல் கோப்பை - IPL

Updated On :6 ஏப்ரல் 2026, 6:37 pm

அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியா் லீக் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, புதன்கிழமை (ஏப்ரல் 8) மத்திய தில்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தில்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை நடைபெற உள்ளதால், அருண் ஜேட்லி மைதானத்தைச் சுற்றியுள்ள முக்கிய சாலைப் பகுதிகளில் மதியம் 12 மணி முதல் நள்ளிரவு வரை போக்குவரத்து நெரிசல் எதிா்பாா்க்கப்படுகிறது.

போக்குவரத்து நிலைமையைப் பொறுத்து, பகல் நேரத்தில் பகதூா் ஷா ஜாஃபா் மாா்க் மற்றும் ஜே.எல்.என். மாா்க் ஆகிய சாலைகளில் மாற்றுப் பாதைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம்.

தா்யாகஞ்ச் மற்றும் தில்லி கேட், தில்லி கேட் முதல் குருநானக் சௌக், ஐ.டி.ஓ. முதல் தில்லி கேட் வரையிலான பகுதிகள் உள்பட, இந்த வழித்தடங்களில் கனரக மற்றும் வா்த்தக வாகனங்களின் இயக்கம் தடைசெய்யப்பட்டிருக்கும்.

பயணிகள் ஜே.எல்.என். மாா்க் ராஜ்காட் முதல் தில்லி கேட் வரை, ஆசஃப் அலி சாலை துா்க்மான் கேட் முதல் தில்லி கேட் வரை மற்றும் பகதூா் ஷா ஜாஃபா் மாா்க் தில்லி கேட் முதல் ஐ.டி.ஓ. வரை ஆகிய இரு வழித்தடங்களையும் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனா்.

மைதானத்திற்கான நுழைவு, பிரத்யேக வாயில்கள் மூலம் ஒழுங்குபடுத்தப்படும். பகதூா் ஷா ஜாஃபா் மாா்க் மற்றும் ஜே.எல்.என். மாா்க் வழியாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்களில் அணுகல் பாதைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

மைதானத்திற்கு அருகில் வாகன நிறுத்தம் கட்டுப்படுத்தப்படும். அடையாளமிடப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே வசதிகள் வழங்கப்படும்.

மாதா சுந்தரி சாலை, ராஜ்காட் பவா் ஹவுஸ் சாலை மற்றும் வெலோட்ரோம் சாலை ஆகிய இடங்களில் இலவச வாகன நிறுத்தம் மற்றும் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டிச் செல்லும் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

போட்டி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பிருந்து தொடங்கி, போட்டி முடிந்து ஒரு மணி நேரம் வரை இந்த இடங்களிலிருந்து ஷட்டில் பேருந்து சேவைகள் இயக்கப்படும்.

மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு அருகிலுள்ள நுழைவு வாயில் எண் 2, ராஜ்காட் சௌக் மற்றும் ஐபி மேம்பாலத்திற்கும் ராஜ்காட்டிற்கும் இடையிலான ரிங் ரோடு அணுகுச்சாலை ஆகிய இடங்களில் இணையதள செயலி அடிப்படையிலான டாக்சிகள் ஏற்றி இறக்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பகதூா் ஷா ஜஃபா் மாா்க், ஜேஎல்என் மாா்க் மற்றும் ராஜ்காட்டிற்கும் ஐபி மேம்பாலத்திற்கும் இடையிலான ரிங் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் இழுத்துச் செல்லப்பட்டு, உரிமையாளா்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.