சென்னை தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.
செம்பாக்கம் நகராட்சி ரங்கா காலனியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் உதயசேகர் (61). இவர் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் லால்குடியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். அங்கு காய்ச்சல் அதிகரித்த நிலையில் மீண்டும் சென்னை வந்து திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதையடுத்து ஆபத்தானநிலையில் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பிரின்ஸ் உதயகுமார் பன்றிக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த தகவல் கிடைத்த உடன் செம்பாக்கம் நகராட்சி ஊழியர்கள் ரங்கா காலனி பகுதியில் தீவிர சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனர். வீடுவீடாகச் சென்று சோதனை நடத்தி காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை வழங்கினர். காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப்

நீட் தோ்வா்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
சிங்கீதம் சீனிவாச ராவ் படத்தின் டீசர்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

