மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம், மேற்கூரை ஆகியன ரூ.15 லட்சம் செலவில் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் மாடியில் உள்புறமாக பயணிகள் டிக்கெட் கவுன்ட்டர் செயல்பட்டு வந்தது. இதனால், படிக்கட்டுகளில் ஏறிச்சென்று டிக்கெட் பெறுவதில் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். இதையடுத்து, ஆர்.எஸ். பாரதி எம்.பி.யிடம் முதலாவது நடைமேடையில் டிக்கெட் கவுன்ட்டர் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம், மேற்கூரை அமைத்துக் கொடுக்கப்பட்டது. இதன் தொடக்கவிழா மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஆர்.எஸ். பாரதி எம்.பி., சட்டப் பேரவை உறுப்பினர் தா.மோ. அன்பரசன், ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் கே.மனோஜ், முதுநிலை வர்த்தக மேலாளர் ஆர்.சத்தியநாராயணஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!
வாய்ப்புகள் வழங்கும் ஒப்பந்தம்!

சபலென்காவை சாய்த்தாா் பாப்டிஸ்ட்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

