செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

ராயபுரம் மண்டலத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளை போலீஸார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர். 

பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்படும் மீரா லப்பை தெருவை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள்.

Published On :


பெருநகர சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்தில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட வீடுகளை போலீஸார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர். 
ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட வார்டு 56-இல் உள்ள மீரா லப்பை தெருவில் சாலையை ஆக்கிரமித்து 20-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டிருந்தன. 
இந்த வீடுகளை அகற்றக் கோரி, அதன் உரிமையாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடந்த 2012-இல் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், மாநகராட்சி நடவடிக்கையை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், மீரா லப்பை தெருவில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
இதையடுத்து, காவல் துறையினரின் உதவியுடன் மீரா லப்பை தெருவில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினர். 
இதற்கு வீட்டின் உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.