மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பள்ளிக்கரணையில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கரணையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள்

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 4:13 am IST


பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கரணையில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கரணை கடந்த 2011-ஆம் ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் பாதாளச் சாக்கடை,  குடிநீர் இணைப்பு, சாலை வசதி ஆகியவை முறையாகச் செய்யப்படாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் சார்பில் மாநகராட்சியின் 189-ஆவது வார்டு அலுவலகத்தின் முன் பள்ளிக்கரணை நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து பள்ளிக்கரணை நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் என்.சுந்தரம் கூறியதாவது: பள்ளிக்கரணை பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. இதனால், சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால்  கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.  இதுவரை பள்ளிக்கரணையில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய அளவில் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படவில்லை. மேடவாக்கம் முதல் பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி வரையிலான சாலையை அகலப்படுத்தும் பணி நீண்ட நாள்களாக நடைபெற்று வருகிறது. 
இதனால், அச்சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பள்ளிக்கரணை பகுதியில் மழை நீர் வடிகால் விரைவில் அமைப்பதுடன், இப்பகுதியில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பள்ளிக்கரணை மாநகராட்சி வார்டு அலுவலகம் முன்பு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.