சுவாமி விவேகானந்தர், சட்டமேதை அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி சமூக பிரிவினைகளை அகற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஏபிவிபி அமைப்பின் தேசியச் செயலாளர் ஆஷிஷ் சௌஹான் கூறினார்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின் தேசிய செயற்குழு கூட்ட வரவேற்பு நிகழ்ச்சி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏபிவிபிஅமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ஆஷிஷ் செளஹான் பேசியது: சட்ட மேதை அம்பேத்கர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் கொள்கைகளை முன்னிறுத்தி இளைஞர்கள் பிரிவினையை ஒழிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் தங்களது கலாசாரம், பண்பாடு ஆகியவற்றுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளனர் என்றார்.
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் பேசுகையில், விவேகானந்தரின் சிந்தனைகளை மாணவர்கள் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஏபிவிபி அமைப்பின் தேசியத் தலைவர் சுப்பையா சண்முகம் பேசியது: அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டுக்கு சுவாமி விவேகானந்தர் சென்ற போது, பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் அவருக்கு தேவையான உதவிகளை வழங்கினர். சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு அளப்பரியது. தமிழகம் தேசிய மயமான சித்தாந்தத்துடன் இணைந்துள்ளது. ஆனால், சிலர் இது தனிப்பட்ட பகுதி எனக் காட்டிட முயற்சிக்கின்றனர் என்றார்.
நிகழ்வில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சுப்பிரமணியன், வி ஐ டி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம், ஏபிவிபி அமைப்பின் மாநிலத் தலைவர் தமிழ்நாயகம், மாநிலச் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தாயாவதை உறுதி செய்தார் சமந்தா! மகப்பேறு விடுமுறை எடுப்பதாகப் பேச்சு!

வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை அதிகரித்த பந்தன் வங்கி!

விஜய் பேச்சு, உதயநிதி எதிர்வினை ஏற்புடையதல்ல : மு. வீரபாண்டியன்

5/16: உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது பனாமா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



