இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனி நீதிபதி, துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் அளித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்து தீா்ப்பளித்தாா். இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஆளுநா் கிரண் பேடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மனு தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து, ஆளுநா் கிரண் பேடி மற்றும் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டன.