அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானால் தாக்கப்பட்ட மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய நிலையில், ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்க படைகளும் கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றன.
ஈரானில் இருந்து ஏவப்பட்ட பல பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாக வளைகுடா நாடுகள் கூறியிருக்கின்றன.
நாட்டின் மிகப்பெரிய ஷாய்பா எண்ணெய் வயலைக் குறி வைத்து ஈரான் ஏவிய நான்கு ட்ரோன்களை தடுத்து நிறுத்தியதாக சௌவூதி அரேபியா தெரிவித்துள்ளது, இது ஈரான் ஒரு சில மணி நேரங்களுக்குள் நடத்திய இரண்டாவது தாக்குதல்.
சில இடங்களில் குண்டுகள் விழுந்து வெடிச் சப்தங்கள் கேட்டு எச்சரிக்கை மணி ஒலித்ததால் மக்கள் ரயில் சுரங்கப்பாதைகளுக்குள் பதுங்கிக் கொண்டனர்.
இதற்கிடையே, இஸ்ரேலிய போர் விமானங்கள் பெய்ரூட் மற்றும் தெஹ்ரான் மீது கடும் தாக்குதலை நடத்தியது. இதனால், ஈரானில் பலியானவர்கள் எண்ணிக்கை 1230 ஆகவும், டெபனானில் பலியானோர் எண்ணிக்கை 200 ஆகவும் உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

லெபனானில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்- 89 போ் உயிரிழப்பு; போா்நிறுத்தத்தில் விரிசல்?

ஈரானின் பெட்ரோ கெமிக்கல் உற்பத்தி நிலையங்களைத் தாக்கிய இஸ்ரேல்!

அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

