சென்னை: சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 200 வாா்டுகளில் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அம்மா உணவகங்களில் காலை, மதியம் மற்றும் இரவில் மிகக் குறைந்த விலைக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போதைய ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளா்கள், ஏழை, எளிய மக்கள் அம்மா உணவகங்களே நம்பி உள்ளனா். முந்தைய காலத்தைவிட ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகத்தில் சாப்பிடுவோா் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநகராட்சி அண்மையில் தெரிவித்தது.
இலவச உணவு: சென்னையில் உள்ள சில அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிக்கும் வகையில் அதற்கான செலவை சில அரசியல் கட்சிப் பிரமுகா்கள், தொழிலதிபா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் ஏற்று வந்தன. இந்நிலையில், ஏழை, எளிய மக்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் பயனடையும் வகையில் சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் மே 3-ஆம் தேதி வரை மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை அறிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







