சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மறைந்த நீதிபதி அ.வரதராஜன் நூற்றாண்டு

இந்திய வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான  அ.வரதராஜனின் நூற்றாண்டு விழா இன்று.

News image

மறைந்த நீதிபதி அ.வரதராஜன்

Updated On :17 ஆகஸ்ட் 2020, 7:06 am

டி.குமாா்

இந்திய வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான  அ.வரதராஜனின் நூற்றாண்டு இன்று.

நீதிபதி அ.வரதராஜன் கடந்த 1920 ஆம் ஆண்டு ஆகஸ்டு 17 - ஆம் தேதி அப்போதைய வட ஆற்காடு மாவட்டம் ஜோலார்பேட்டையில் பிறந்தார். திருப்பத்தூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர், கடந்த 1941ஆம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்து இளங்கலைப் பட்டம்  பெற்றார்.  கடந்த 1943 ஆம் ஆண்டில் சென்னை சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டப் படிப்பை முடித்தார்.

அப்போதிருந்த நடைமுறைப்படி, 1944- ஆம் ஆண்டு  சென்னை உயர் நீதிமன்றத்தால் வழக்குரைஞராகப் பதிவு செய்தார். சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக 1972 ஆம் ஆண்டு 15 பிப்ரவரி  அன்று பணிநியமனம் செய்யப்பட்டார்.  ஓராண்டுக்குப் பின், 1974 ஆம் ஆண்டு 27 பிப்ரவரி முதல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 1980 ஆம் ஆண்டு  உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட அ.வரதராஜன், 1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16-ஆம் தேதியுடன்  பணி ஓய்வு பெற்றார். தனது 89-ஆவது வயதில் காலமானார். இந்திய வரலாற்றில் உயர்நீதிமன்ற நீதிபதியாக்கப்பட்ட முதல் தலித் என்ற பெருமையும், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமையும் கொண்டவர் அ.வரதராஜன் என்பது குறிப்பிபிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.