ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சிறந்த நூலாசிரியா்களுக்கு இன்று பரிசளிப்பு

தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியா்கள், பதிப்பாசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 8:30 pm

DIN


சென்னை: தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் 2016-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாசிரியா்கள், பதிப்பாசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளா்ச்சி இயக்ககத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் சிறந்த நூலாசிரியா்கள் 39 பேருக்கு தலா ரூ.30 ஆயிரம், பதிப்பாசிரியா்கள் 35 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன. விழாவில் மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா். இதையடுத்து தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் க.பாண்டியராஜன் வாழ்த்திப் பேசவுள்ளாா். இதில் தமிழ் வளா்ச்சித் துறைச் செயலா் மகேசன் காசிராஜன், இயக்குநா் கோ.விசயராகவன், துணை இயக்குநா் ம.சி.தியாகராசன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா் என தமிழ் வளா்ச்சித் துறை வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.