25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

தேனாம்பேட்டை - சைதை மேம்பாலப் பணி: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை வரையிலான மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.

Published On :4 மார்ச் 2026, 6:36 pm IST

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நடைபெற்று வரும் உயர்நிலைப் பாலம் அமைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று(மார்ச் 4) ஆய்வு செய்தார்.

இந்த உயா்நிலை சாலையின் மூலம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.20 கி.மீ. தொலைவை 3 முதல் 5 நிமிஷத்திலேயே கடந்து செல்லலாம்.

மேலும் கட்டுமானம் நிறைவடையும்போது சென்னை மாநகரின் மிக நீண்ட பாலமாக இப்பாலம் அமையும் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு பாலத்தின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இரும்பினாலான முன்வார்க்கப்பட்ட கட்டமைப்பு உபகரணங்களைக் கொண்டும், மண்ணின் தாங்கு திறனை நவீன தொழில்நுட்பத்தை கொண்டு மேம்படுத்தி அடித்தளம் அமைக்கும் வகையிலும், வடிவமைக்கப்பட்டு கட்டுமான பணிகள் ரூ.621 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3.20 கி.மீ. நீளத்திற்கு கட்டப்பட்டு வரும் நான்கு வழித்தட உயர்மட்டச் சாலையின் கட்டுமானப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பணிகளை விரைந்திட முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், பாலத்தின் தூண்களுக்கான பணிகள் முடிவுற்ற பகுதிகளில் போக்குவரத்தினை சீர்செய்திட நடவடிக்கை எடுக்குமாறும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Summary

Chief Minister Stalin inspected the flyover works from Teynampet to Saidapet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.