ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

மார்ச் 9-ல் அறிமுகமாகிறது ஓப்போ கே 14 ஸ்மார்ட்போன்!

ஓப்போ கே 14 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது குறித்து...

News image

ஓப்போ கே 14 5ஜி - படம் / நன்றி - ஓப்போ

Updated On :4 மார்ச் 2026, 6:35 pm IST

ஓப்போ கே 14 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 9 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது.

அதிகபட்சமாக 7000mAh பேட்டரி திறனுடன் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன், மார்ச் 9 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியாகவுள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் ஓப்போ கே 14 அறிமுகமாகவுள்ளது.

இதற்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ஓப்போ கே 13-ன் மேம்பட்ட அமசமாக இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்

ஓப்போ கே 14 5ஜி ஸ்மார்ட்போன், 7000mAh பேட்டரி திறன் கொண்டது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 45W திறன் உடையது.

இதற்கு முன்பு வெளியான ஓப்போ கே 13 ஸ்மார்ட்போனும் 7000mAh பேட்டரி கொண்டிருந்தது. ஆனால், 80W வேகமாக சார்ஜ் ஆகும் திறன் இருந்தது.

ஸ்நாப்டிராகன் 7எஸ் நான்காம் தலைமுறை புராசஸர் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் கேமரா அம்சங்கள் குறித்து எந்தவித அறிவிப்பையும் ஓப்போ நிறுவனம் வெளியிடவில்லை.

எனினும், ஓப்போ கே 13 ஸ்மார்ட்போன் 50MP முதன்மை கேமராவையும் 2MP டெப்த் சென்சார் கேமராவையும் கொண்டிருந்தது. இதே மாதிரியான கேமரா அம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓப்போ கே 13 ஸ்மார்ட்போன் அறிமுக விலை ரூ. 17,999 ஆக இருந்தது. இதே மதிப்பில் ஓப்போ கே 14 விலையும் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Summary

Oppo K14 5G launch in India set for March 9 with 7000mAh battery

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.