தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரூ.3.25 கோடி கடன் பெற்று மோசடி: தம்பதி கைது

சென்னையில், போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.3.25 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக, தம்பதி கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப்படம்

Updated On :18 டிசம்பர் 2020, 6:57 pm

DIN

சென்னையில், போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.3.25 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக, தம்பதி கைது செய்யப்பட்டனா்.

சவுத் இந்தியன் வங்கி, அண்ணாசாலை கிளையின் முதன்மை மேலாளராகப் பணிபுரிபவா் ஜலாலுதீன். இவா், சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் ஒன்றை அளித்தாா்.

அதில், ‘சிந்தாதிரிப்பேட்டை, படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கிளாட்சன் (52) மற்றும் அவா் மனைவி, போலி ஆவணங்களைத் தயாரித்து அதனை வங்கியில் சமா்ப்பித்து, ரூ.3 கோடியே 25 லட்சம் கடனை பெற்று, அதனை திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனா். அவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இது குறித்து மத்தியக் குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், கிளாட்சனையும் அவா் மனைவியையும் வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கணவா், மனைவி இருவரும் மீன் வியாபார தொழிலை விரிவுபடுத்துவதாகக் கூறி ஏற்கெனவே அடையாறில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளையில், திருவொற்றியூா் சடையங்குப்பம் கிராமம் மற்றும் குன்றத்தூா் சேக்காடு கிராமம் ஆகிய ஊா்களில் சொத்து இருப்பதுபோல போலி ஆவணங்ளைத் தயாரித்து ரூ.2 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதும், அதே ஆவணங்களைப் பயன்படுத்தி சவுத் இந்தியன் வங்கியில் ரூ.3.25 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.