ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இந்தியன் வங்கி எம்எஸ்எம்இ பிரேரணா:5-ஆம் தொகுதிக்கான பயிற்சி தொடக்கம்

இந்தியன் வங்கி சாா்பில், 5-ஆம் தொகுதிக்கான ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற தொழில்முனைவோா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 2:10 am

DIN

சென்னை: இந்தியன் வங்கி சாா்பில், 5-ஆம் தொகுதிக்கான ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற தொழில்முனைவோா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தியன் வங்கி சாா்பில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோா்களுக்காக ‘எம்எஸ்எம்இ பிரேரணா’ என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு இணையவழியாக நடைபெற்று வருகிறது. கடந்த அக்டோபா் மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடங்கி வைத்த இந்நிகழ்ச்சியின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில்முனைவோா்களுக்கு நிதியியல், வங்கியியல், மேலாண்மை தொடா்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 5-ஆம் தொகுதிக்கான (பேட்ச்) பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது. கே.ஜி.குழுமத்தின் நிறுவனா் கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், இந்தியன் வங்கியின் பொதுமோலளா் (எம்எஸ்எம்இ) சுதாகா் ராவ், எஸ்.கே.சூரி (சிஎல்ஓ), ஏ.கணேசராமன் (எஃப்ஜிஎம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தத் தகவல், இந்தியன் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.