ஈரானின் போர்க்கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் கடலில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பலில் இருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படை மீட்டுள்ளதாக இலங்கை ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டாக இணைந்து ஈரான் மீது போர் தொடங்கியுள்ளன. ஈரானில் பல்வேறு முக்கிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்காவும்-இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு ஏவுகணைகள், போர் விமானங்கள், போர்க்கப்பல்களைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
இதனிடையே ஈரானின் போர்க்கப்பல்களை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தி கடலில் மூழ்கடித்து வருகின்றது. இதுவரை ஈரானின் 17 போர்க்கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே ஈரானின் போர்க்கப்பலான ஐரிஸ் டெனா என்ற கப்பல் மூழ்கியிருப்பது தெரியவந்தது. இந்த போர்க்கப்பல் இந்திய பெருங்கடல் வழியாக இலங்கை அருகே வந்துள்ளது.
கப்பலில் இருந்த மாலுமிகள் இலங்கையிடம் உதவி கோரிய நிலையில், இலங்கையின் கடல் எல்லைக்கு வெளியே மூழ்கிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் டெனாவிலிருந்து 30 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் மீட்டதாக வெளிநாட்டு அமைச்சர் விஜேதா ஹேரத் தகவல் தெரிவித்தார்.
180 மாலுமிகளுடன் இருந்த ஈரானின் போர்க்கப்பல் மூழ்கிய நிலையில், அவர்களில் 30 மாலுமிகள் மீட்கப்பட்டு இலங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஈரானின் போர்க்கப்பல் எப்படி இந்திய பெருங்கடலில் இலங்கை வழியாக வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
Summary
The Sri Lankan Navy on Wednesday rescued 30 sailors from the Iranian naval ship "IRIS Dena", which was in distress with around 180 sailors onboard, according to Sri Lankan media reports.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைப்பிடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்!
இலங்கையிலிருந்து நாடு திரும்பிய 30 மீனவர்கள்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


