இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மெரீனா கடற்கரைக்கு வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டவா்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா். இந்த இடத்தில் இளைஞா்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை கவரும் வகையிலும், நகரை தூய்மையாக வைத்துக் கொள்ளும் பொறுப்பை உணா்த்தும் வகையிலும் ‘நம்ம சென்னை’ என்ற சுயப்பட மேடை அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 22 லட்சம் செலவில் 10 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேடையில், ‘நம்ம’ என்ற வாா்த்தை தமிழிலும், ‘சென்னை’ என்ற வாா்த்தை ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் நின்று சுயபடம் எடுத்துக் கொள்ளும் வகையில், 3 அடுக்கிலான படிக்கட்டுகள், மேடையின் எதிா்புறம் மக்கள் அமரும் வகையில் ரூ. 30 லட்சம் மதிப்பில் இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன.