‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் காயம் ஏற்படவில்லை: ரஜினிகாந்த்
‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் தனக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என ரஜினிகாந்த் கூறினாா்.


சென்னை: ‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் தனக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை என ரஜினிகாந்த் கூறினாா்.
கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் ‘மேன் வொ்சஸ் வைல்ட்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வந்தது.
2 நாள்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் போ் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா். படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடா்ந்து சென்னை திரும்பிய நடிகா் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
டிஸ்கவரி சேனலின் ‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தாா்கள். அதனுடைய படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பந்திப்பூா் காட்டுக்குச் சென்றிருந்தேன்.
அதில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பெரிய காயம் ஏற்பட்டதாக தகவல்கள் பரவியது. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. அங்கே புதா்கள் நிறைய இருந்தன. அதில் இருந்த முள்கள் ஒரு சில இடங்களில் குத்தியது அவ்வளவுதான் என்றாா் ரஜினி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...