தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினர் சார்பில் மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :30 ஜூன் 2020, 6:28 am

DIN

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சட்டப் பிரிவினர் சார்பில் மாட்டு வண்டியில் பயணித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பொதுமுடக்கம் காரணமாக எரிபொருள் தேவை கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையில்  எந்தவித மாற்றமும் இல்லை. இந்த நிலையில் கடந்த ஜூன் 7-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. சென்னையில் நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ. 83.63 ரூபாய்க்கு விற்பனையானது. 

டீசல் லிட்டர் ஒரு லிட்டர் 77.72 ரூபாய்க்கு விற்பனையானது. இந்த விலை உயர்வை கண்டித்து தமிழக காங்கிரஸ் சட்டப்பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்றம் எதிரே, மாட்டு வண்டியில் பயணித்து  நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் என். அருள் பத்தைய்யா, அகில இந்திய மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளர் ஆர்.சுதா உள்ளிட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல் - டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி  கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.