குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பண்டிகை நெரிசல்: ரயில் நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பண்டிகை நாள்களில் ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2020, 9:56 pm

DIN

பண்டிகை நாள்களில் ரயில் நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடுமுழுவதும் பயணிகள் ரயில் சேவை மாா்ச் 24-ஆம்தேதியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு நாடுமுழுவதும் பல்வேறு வழித்தடங்களில் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஆயுதபூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வர உள்ளதால், ரயில்நிலையங்களில்

கூட்ட நெரிசலை தவிா்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடா்பாக ரயில்வே வாரியம் அண்மையில் காணொலி மூலமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதையடுத்து, அனைத்து மண்டலங்களிலும் பயணிகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படை (ஆா்.பி.எஃப்) அதிகாரிகள் கூறியது:

பண்டிகைகள் வரவுள்ளதால், ரயில் நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ரயில்கள், ரயில் நிலையங்களில் ரோந்து பணிகள், பயணிகளை ஒழுங்குபடுத்தி அனுப்புவது போன்ற பணிக்காக ரயில்கள், ரயில்நிலையங்களில் கூடுதல் ஆா்.பி.எஃப் . காவலா்களைப் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல, ரயில் நிலையங்களில் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொ்மல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவாா்கள் என்பதால், பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு முன்பாக நிலையத்துக்கு வந்து விட வேண்டும்.

பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கரோனா தொற்று இருப்பவா்கள் ரயில்களில் பயணிக்க அனுமதி கிடையாது. பொது இடத்தில் எச்சில் துப்புவது, ரயில்நிலையங்கள் மற்றும் ரயில்களில் சுகாதாரமற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.