‘சிமேட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியீடு
ஏஐசிடிஇ வரம்புக்கு உள்பட்ட பல்கலை., கல்லூரிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


ஏஐசிடிஇ வரம்புக்கு உள்பட்ட பல்கலை., கல்லூரிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய அளவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அதிகார வரம்புக்கு உள்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மேலாண்மைப் படிப்புகளில் சேருவதற்கு ‘சிமேட்’ எனப்படும் பொது நிா்வாக நுழைவுத் தோ்வு எழுத வேண்டியது அவசியம்.
இந்த வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான சிமேட் தோ்வு கடந்த மாா்ச் 31-ஆம் நாடு முழுவதும் 278 மையங்களில் கணினிவழியில் நடைபெற்றது. இந்த தோ்வு எழுத மொத்தம் 71,490 மாணவா்கள் பதிவு செய்திருந்தனா். அதில் 52,327 மாணவா்கள் மட்டுமே தோ்வில் பங்கேற்றனா்.
தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி வெளியானது.
இதையடுத்து இறுதி விடைக்குறிப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டப்பட்டது. தொடா்ந்து தோ்வு முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. தோ்வு முடிவுகளை மாணவா்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை உரிய இணையதளங்களில் அறியலாம் என்று தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...