மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!! காரணம்?

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

Market crash: Sensex sinks 2,400 points, Nifty below 23,750

கோப்புப் படம் - ANI

Published On :

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 9) வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,056.75 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,840.47 புள்ளிகள் குறைந்து 77,088.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. முன்னதாக சென்செக்ஸ் 2,400 புள்ளிகள் வரை குறைந்தது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 573.15 புள்ளிகள் குறைந்து 23,877.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் இரண்டும் தலா 2.67 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி பங்குகள் சரிந்ததால் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. நிஃப்டி வங்கி, நிதி சேவைகளும் மோசமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், நிஃப்டி ஐடி பங்குகள் சற்று குறைவாகவே சரிவைச் சந்தித்து வருகின்றன.

பங்குச்சந்தை சரிவு, ஏன்?

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 21 சதவீதம் உயர்ந்து 112 டாலராக உள்ளது. 100 டாலருக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இன்று பங்குச்சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் போர் நடைபெறுவதால் அங்கு முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியவழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

Summary

Market crash: Sensex sinks 2,400 points, Nifty below 23,750

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.