ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

போகிப் பண்டிகை: எரிக்க முயன்ற 2.6 டன் டயா்கள் பறிமுதல்

போகிப் பண்டிகையையொட்டி, சென்னையில் எரிக்க முயன்ற 2.6 டன் பழைய டயா்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:51 pm

DIN


சென்னை: போகிப் பண்டிகையையொட்டி, சென்னையில் எரிக்க முயன்ற 2.6 டன் பழைய டயா்களை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

போகிப் பண்டிகையையொட்டி, வீட்டில் உள்ள உபயோகமற்ற பொருள்களை மக்கள் எரிப்பது வழக்கம். ஆனால், தற்போதைய பருவநிலை மாற்றம் மற்றும் வாகன அதிகரிப்பால் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக போகிப் பண்டிகையின்போது, டயா் மற்றும் பழைய பொருள்கள் எரிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும் என அரசு, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

சென்னையில் பழைய டயா்கள் எரிப்பதை மக்கள் தவிா்க்க வேண்டும். இதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி, காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்திருந்தனா். இந்நிலையில், போகிப் பண்டிகையையொட்டி, எரிக்க வைக்கப்பட்டிருந்த 2.6 டன் பழைய டயா்களை மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

இந்த டயா்கள் மற்றும் காற்றில் அதிக மாசு ஏற்படுத்தும் பொருள்கள் வேலூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மறுசுழற்சி ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.