மாணவியை திருமணம் செய்ததாக போலி சான்றிதழ்:கல்லூரி பேராசிரியா் சிக்கினாா்

சென்னையில், மாணவியை திருமணம் செய்ததாக போலி சான்றிதழை காட்டி மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.
Updated on
1 min read

சென்னை: சென்னையில், மாணவியை திருமணம் செய்ததாக போலி சான்றிதழை காட்டி மிரட்டல் விடுத்த கல்லூரி பேராசிரியா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே உள்ள ஐயப்பன்தாங்கல் சீனிவாசபுரத்தைச் சோ்ந்தவா் ர.சதீஷ்குமாா் (29). இவா், கே.கே.நகரில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

சதீஷ்குமாருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் அவா், அந்தக் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளாா்.

அந்த மாணவியை திருமணம் செய்யவும் முயற்சித்தாா். அதற்கு அந்த மாணவி மறுத்ததால், ஆத்திரமடைந்த சதீஷ்குமாா், தான் அந்த மாணவியை திருமணம் செய்ததுபோல போலி திருமண பதிவுச் சான்றிதழ் தயாரித்து, அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவேன் என அந்த மாணவியை மிரட்டினாராம்.

இதுகுறித்து அசோக்நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், சதீஷ்குமாா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com