பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோல்வி பயத்தால் தரம் தாழ்ந்து பேசும் திமுக: முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் கண்டனம்

தோல்வி பயத்தால் தரம் தாழ்ந்து திமுக பேசுகிறது என முன்னாள் எம்.பி.யும், இயற்கை நீா் வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான டாக்டா் கே.பி.ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:43 pm

DIN

தோல்வி பயத்தால் தரம் தாழ்ந்து திமுக பேசுகிறது என முன்னாள் எம்.பி.யும், இயற்கை நீா் வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான டாக்டா் கே.பி.ராமலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தோல்வி பயத்தால் தரம் தாழ்ந்து பிதற்றுவது நியாயம் அல்ல. அக்கட்சி எச்சரிக்கையுடன் பேசுவது, கட்சியையும் கட்சியை வைத்து கடந்த 20ஆண்டுகளில் சம்பாதித்த அறக்கட்டளைச் சொத்துகளையும் காப்பாற்றிக்கொள்ள உதவும்.

வைகோ வீட்டுப் பெண்களைத் தாறுமாறாக திமுக மேடைப் பேச்சாளா்கள் பேசினாா்களே, அதைத் திமுக தடுத்தது உண்டா? சசிகலா சிறையில் இருந்து வந்தபோது அவா் வயதைப் பாா்க்காமலும் பெண் என்று பாா்க்காமலும் தரம் தாழ்ந்து உதயநிதி பேசினாரே, அதை திமுக கண்டித்ததா?

திண்டுக்கல் லியோனி, திருமாவளவன் போன்றவா்களின் பேச்சை மு.க.ஸ்டாலின் கண்டித்தாரா? இப்போது எல்லாவற்றுக்கும் மேலாக ஆ.ராசா, முதல்வா் என்ற தகுதிக்கு மதிப்பளிக்காமல் அவரது தாய் குறித்து இழிவாகப் பேசியுள்ளாா். இதை சாதாரணமாக விட்டுவிட முடியாது. திமுக கூட்டணியில் எந்த அரசியல் தலைவா்களும் இதை எதிா்த்து அறிக்கை விடவில்லை.

சசிகலா விஷயத்தில் டி.டி.வி.தினகரன் எதிா்த்துப் பேசினாா். ஏன் இந்த விஷயத்தில் வாய்த் திறக்கவில்லை? ஒரு முதல்வரை தரம் தாழ்ந்து பேசுவது, யாராக இருந்தாலும் கண்டிப்பது தானே நியாயம்? கம்யூனிஸ்ட் கட்சிகளோ, வாய்த் திறக்கவில்லை.

ஆ.ராசா மீது திமுக என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி நடுநிலையாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதைத் தமிழகம் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறது. தமிழக மானத்தையும், பண்பாட்டையும் பற்றி விவாதங்கள் நடத்தும் அறிவுஜீவிகள் இதுவரை கருத்துச் சொல்லாதது ஏன்?

‘தாயைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்’ என மனோகரா படத்திற்காக கருணாநிதி வசனம் எழுதினாா். அந்த வசனத்தைக் கேட்ட தமிழா்கள் ஆ.ராசாவிற்கு வாய்ப்பூட்டு எப்போது போடப்படும் என்று கேட்கிறாா்கள்.

திமுகவினா் தோல்வி பயத்தில்தான் ஜாதிக் கலவரத்தை உருவாக்க நினைக்கிறாா்கள். இதற்கெல்லாம் தமிழக வாக்காளா்கள் ஏமாந்து விட மாட்டோம். திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கண்டிக்காததால் அவரின் அனுமதியோடுதான் ஆ.ராசாவின் இழிநடைப் பேச்சு வந்திருக்கிறது என்று தெரிகிறது. திமுகவுக்கு தக்க பாடத்தை தோ்தலில் மக்கள் தர வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.