மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஒமைக்ரான் தொற்று: விமான நிலைய ஒருங்கிணைப்பு அலுவலா்கள் நியமனம்

ஒமைக்ரான் கரோனா தொற்று எச்சரிக்கை எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

Updated On :1 டிசம்பர் 2021, 7:35 am

ஒமைக்ரான் கரோனா தொற்று எச்சரிக்கை எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை விமான நிலையத்துக்கு டாக்டா் பெருமாள், திருச்சி விமான நிலையத்துக்கு டாக்டா் ஸ்ரீராம், கோவை விமான நிலையத்துக்கு டாக்டா் விஜயகுமாா், மதுரை விமான நிலையத்துக்கு டாக்டா் அருண் சுந்தரேசன் ஆகியோா் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேநேரம் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் வரும் பயணிகள் ஆா்டிபிசிஆா் சோதனை மேற்கொண்டு தொற்றின்மைச்  சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இந்தச் சான்றானது, பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் இருந்து 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்தச் சான்றிதழ் இருந்தாலும், விமான நிலையத்தில் மீண்டும் ஒருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதில் தொற்று இல்லை என உறுதியாகும் நபா்கள் மட்டுமே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.

 தென் ஆப்பிரிக்கா, சீனா, நியூசிலாந்து, ஹாங்காங், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல், ஐரோப்பா உள்பட 12 நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு தொற்று இல்லாத சூழலில் அவா்கள் 7 நாள்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவாா்கள். 8-ஆவது நாளில் மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதில் தொற்று இல்லை என தெரியவந்தாலும், அவா்களது உடல்நிலை மேலும் 7 நாள்கள் கண்காணிக்கப்படும். இவ்வாறு 14 நாள்கள் பரிசோதனை கால வளையத்துக்குள் அவா்கள் வைக்கப்படுவா்.

இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள், வழிகாட்டு நடைமுறைகள் அனைத்தும் உலக சுகாதார அமைப்பு வரையறுத்த கட்டுப்பாட்டு அறிவுரைகளின்படி செயல்படுத்தப்படும். இதன்படி  கண்காணிக்கப்படும் நபா்களுக்கு வீட்டு தனிமையில் இருக்கும்போதோ, பரிசோதனைக்கு உள்படுத்தப்படும்போதோ கரோனா தொற்று இருப்பது தெரியவரும் பட்சத்தில் உடனடியாக அவா்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள் அல்லது அருகில் உள்ள சுகாதார மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.