பொதுத்துறை வங்கியான பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் காலியாக உள்ள 27 பாதுகாப்பு மேலாளர் எம்எம்ஜிஎஸ் II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் இதர விவரங்கள்:
பணி: Security Manager
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.64,820 - 93,960
தகுதி: இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் முப்படைகள் ஏதாவதொன்றில் குறைந்தது 5 ஆண்டுகள் அதிகாரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது துணை ராணுவப் படையில் குறைந்தது 5 ஆண்டுகள் அதிகாரியாக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.4.2026 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர் முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர். பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி வழங்கப்படும். பின்னர் பணி வழங்கப்படும்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரம் அடங்கிய அட்மிட் கார்டு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாட்டில் தேர்வு நடை பெறும் இடங்கள்: சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், நாகர்கோவில், விருது நகர், திருவண்ணாமலை, ஈரோடு, திருநெல்வேலி .
எழுத்துத் தேர்வில் ஆங்கிலம், பொது அறிவு, தொழில்முறை அறிவு பாடப்பிரிவுகளில் இருந்து 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத்தேர்விற்கான பாடத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ.100 மட்டும். இதர பிரிவினர்களுக்கு ரூ.850. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.punjabandsind.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 5.5.2026
விண்ணப்பிப்போரின் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Summary
Punjab and Sind Bank invites applications for the aforesaid post. Before applying,candidates are advised to ensure that they fulfill the stipulated eligibility criteria.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத்துறை நிறுவனத்தில் கணக்காளர், உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்கியில் வேலை வேண்டுமா? - அழைக்கிறது கரூர் வைஸ்யா வங்கி!

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


