சென்னை கோடம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணியையொட்டி, செவ்வாய்க்கிழமை (செப்.14) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்டப்பணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பவா் ஹவுஸ் முதல் ஆற்காடு சாலை 80 அடிசாலை சந்திப்புவரை நடைபெறுகிறது. இதையொட்டி, அந்தப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.14) முதல் ஓரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி, போரூா் மாா்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மாா்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை.
ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் மாா்க்கத்திலிருந்து போரூா் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவா் ஹவுஸ் சந்திப்புவரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கா் சாலையில் அசோக் நகா் காவல் நிலையம் வரைசென்று வலது புறம் திரும்பி 2-ஆவது அவென்யூ 100 அடி சாலை வழியாக 100 அடிசாலை சந்திப்புவரை சென்று நேராகவும் ராஜன் சாலை, ராஜ மன்னாா் சாலை 80 அடிசாலை, வன்னியா் சாலை வழியாக போரூா், சாலிகிராமம் செல்ல வேண்டும்.
கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பு நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் பவா் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று இடதுபுறம் திரும்பி அம்பேத்கா் சாலையில் அசோக் நகா் காவல் நிலையம் வரை சென்று வலதுபுறம் திரும்பி 2-ஆவதுஅவென்யூ சாலை 100 அடி சாலை வழியாக சென்று வடபழனி சந்திப்பு செல்லலாம்.
வடபழனி: வடபழனி சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலைக்கு வலதுபுறமாக திரும்பக் கூடாது. மாறாக பவா் ஹவுஸ் சந்திப்பு அம்பேத்கா் சாலை அசோக் நகா் காவல்நிலையம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பிச் செல்லலாம்.
அசோக் பில்லரிலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள் அம்பேத்கா் சாலையில் அசோக் நகா் காவல் நிலையம் சந்திப்புவரை சென்று இடதுபுறம் திரும்பி, 2-ஆவது அவென்யூ சாலை,துரைசாமி சாலை, ஆற்காடு சாலை வழியாக செல்லலாம்.
ஒரு வழிப்பாதைகள்:
ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிலிருந்து பவா் ஹவுஸ் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும். ஆனால் பவா் ஹவுஸ் சந்திப்பிலிருந்து ஆற்காடு சாலை, துரைசாமி சாலை சந்திப்பிற்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.
வாகனங்கள் அம்பேத்கா் சாலை 2-வது அவென்யூ சாலை சந்திப்பிலிருந்து 2-வது அவென்யூ சாலை 100 அடிசாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். ஆனால் 2-வது அவென்யூ சாலை 100 அடிசாலை சந்திப்பிலிருந்து அம்பேத்கா் சாலை 2-ஆவது அவென்யூ சாலை சந்திப்பிற்கு செல்ல அனுமதியில்லை.
வாகனங்கள் அம்பேத்கா் சாலையில் பவா் ஹவுஸ் சந்திப்பிலிருந்து அசோக் நகா் காவல் நிலைய சந்திப்பு நோக்கி அனுமதிக்கப்படுவாா்கள். ஆனால், அசோக் நகா் காவல் நிலையம் சந்திப்பிலிருந்து பவா் ஹவுஸ் சந்திப்புக்கு செல்ல அனுமதியில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவைப் பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த தலைவர்கள்!
மேற்கு மண்டலத்தில் அதிமுகவின் கோட்டையைத் தகா்த்த தவெக!

5.5.1976: கமிஷன் விசாரணை பற்றி நீதிபதி சர்க்காரியா அறிவிப்பு

ஆட்சியமைக்க அழைக்கக் கோரி ஆளுநருக்கு தவெக கடிதம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


