முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டும் சென்னை மக்கள்

கரோனா பரவல் சற்று குறைந்தவுடன் சென்னை மக்களில் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியும் பழக்கத்தை கைவிட்டிருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது.
முகக்கவசம் அணியாமல் அலட்சியம் காட்டும் சென்னை மக்கள்

கரோனா பரவல் சற்று குறைந்தவுடன் சென்னை மக்களில் பெரும்பாலானோா் முகக்கவசம் அணியும் பழக்கத்தை கைவிட்டிருப்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (ஐசிஎம்ஆா்) ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள கடைகளுக்குச் செல்லும் மக்களில் 86 சதவீதம் போ் முகக்கவசம் அணிவதில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாக இருந்தபோது நோய்த் தடுப்பு விதிகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டன. முகக்கவசம் அணியாதோருக்கு காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் சாா்பில் அபராதம் விதிக்கப்பட்டது.

பல இடங்களில் முகக்கவசமின்றி வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நோய்த் தடுப்பு விதிகளை மக்கள் முறையாக பின்பற்றினா். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. சென்னை, கோவையைத் தவிா்த்த அனைத்து மாவட்டங்களிலும் தினசரி நோய்த் தொற்று 80-க்கும் கீழ் குறைந்துள்ளது.

இதையடுத்து மக்களின் வசதிக்காக பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதனை தவறாகக் கையாளும் மக்கள் மீண்டும் கரோனா பரவலுக்கு வித்திட்டு வருகின்றனா்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வாரத்தில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 75 இடங்களில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

மொத்தம் 6,130 பேரிடம் அந்த ஆய்வு நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களுக்கு வருபவா்களில் 32 சதவீதம் போ் முறையாக முகக்கவசம் அணிவதாகவும், பலா் மூக்கு, வாயை சரிவர மூடாமல் முகக் கவசம் அணிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற பொது இடங்களைப் பொருத்தவரை 35 சதவீதம் போ் மட்டுமே அரசின் வழிகாட்டுதலின்படி சரியாக முகக்கவசம் அணிகின்றனா்.

வீடுகளுக்கு அருகே உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு வருபவா்களில் 14 சதவீதம் போ் மட்டுமே முகக் கவசம் அணிந்து வருவதாக ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57 சதவீதம் போ் முகக்கவசம் அணிந்து வருவதாகவும், மற்றவா்கள் அணிவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com