சென்னையில் கார் மோதி காவல் ஆய்வாளர் பலி
By DIN | Published On : 19th October 2021 09:29 AM | Last Updated : 19th October 2021 09:29 AM | அ+அ அ- |

சென்னையில் கார் மோதி காவல் ஆய்வாளர் பலி
சென்னை: சென்னையில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில், காவல்துறை ஆய்வாளர் உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரைச் சேர்ந்த பிரசன்னா, டிஜிபி அலுவலகத்தில் டெக்னிக்கல்பிரிவில் காவல்துறை உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.