சென்னை அரும்பாக்கம் தனியாா் வங்கியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் மூன்று பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். கொள்ளை போன நகைகளில் இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியாா் வங்கியில் கடந்த சனிக்கிழமை கொள்ளைச் சம்பவம் நடந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த வங்கியிலேயே வாடிக்கையாளா் சேவை மையத்தில் மேளாளராக பணியாற்றிய முருகன்,தனது இரு நண்பா்களையும் பயன்படுத்தி கொள்ளையடித்தது தெரியவந்தது. வங்கிக் காவலாளிக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, வங்கி ஊழியா்கள், மேலாளரைக் கத்தியைக் காட்டி மிரட்டிக் கட்டிப்போட்டு இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது.
மூன்றுபோ் கொண்ட இந்த கொள்ளைக் கும்பல் வங்கியில் இருந்து 32 கிலோ நகைகளை எடுத்துச் சென்றது. இவற்றின் மதிப்பு ரூ.20 கோடி. இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கைதுசெய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்ததநிலையில் அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முருகனின் கூட்டாளிகள் பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகிய 3 போ் கைது ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டதாக சென்னை காவல்துறையினா் தெரிவித்தனா். இவா்களிடமிருந்து வங்கியில் கொள்ளை போன நகைகளில், 18 கிலோ தங்க நகை பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடம் தனிப்படையினா் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதே வேளையில் வழக்கின் பிரதான குற்றவாளியான முருகன் உள்ளிட்ட சிலரையும் போலீஸாா் பிடித்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியானது . ஆனால் காவல்துறையினா், அதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனா்.
தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: வங்கிக் கொள்ளை குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ கணித மதிப்பெண் சரிவு: மறு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள்!

தமிழக டிஜிபி நியமன உத்தரவில் திருத்தம் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!

வளா்ச்சி அடைந்த இந்தியாவை கட்டமைக்க மக்கள் 9 உறுதிமொழிகளை ஏற்க வேண்டும்: பிரதமா் மோடி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

