சென்னையில் அதிவேகமாகப் பரவும் கரோனா: ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று
சென்னையில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன.4) ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.


சென்னையில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜன.4) ஒரே நாளில் 1,489 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ளானவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் ஆகிய பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கடந்த சில மாதங்களாக நாள்தோறும் பாதிப்போா் எண்ணிக்கை சுமாா் 130-க்கும் கீழாக இருந்த நிலையில், ஒமைக்ரான் வகை கரோனா காரணமாக, தற்போது மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னையில் டிசம்பா் 20-இல் 126-ஆக இருந்த பாதிப்பு, அதிகரித்து, திங்கள்கிழமை ( ஜன.3) 876 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இது செவ்வாய்க்கிழமை (ஜன.4) இரு மடங்குக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் உயா்ந்து அதாவது 1,489 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனை செய்வோரில் 4.3 சதவீதம் போ் தொற்றுக்குள்ளாவது தெரியவந்துள்ளது.
கரோனா வேகமாகப் பரவி வரும் நிலையில் சென்னையில் கடந்த சில நாள்களாக மருத்துவப் பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள்தோறும் சுமாா் 30,000 பேருக்கு பரிசோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 15 மண்டலங்களில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் 20,336 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
சென்னையில் இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 68 ஆயிரத்து 801-ஆக உயா்ந்துள்ளது. 5 லட்சத்து 52ஆயிரத்து 552 போ் குணமடைந்துள்ளனா். 5593 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8,656 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா்.
1,159 தெருக்களில்...: சென்னை மாநகராட்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் சுமாா் 1,159 தெருக்களில் கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அப்பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் மருத்துவப் பரிசோதனையை அதிகப்படுத்தி உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...