எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்!

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானது பற்றி...

News image

வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து - Photo: X

Updated On :26 மார்ச் 2026, 9:07 am IST

வங்கதேசத்தின் பத்மா ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 23 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ராஜ்பாரி மாவட்டத்தில் இருந்து டாக்காவுக்கு வந்துகொண்டிருந்த பேருந்து, புதன்கிழமை மாலை 5 மணியளவில் தௌலத்தியாவில் உள்ள படகு முனையத்தில், பத்மா ஆற்றைக் கடக்க போக்குவரத்து படகில் பயணிகளுடன் பேருந்தை ஏற்ற முயற்சித்துள்ளனர்.

அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 50 பேர் பயணித்த நிலையில், நீச்சல் தெரிந்த 11 பேர் கரை சேர்ந்துள்ளனர்.

இதுவரை 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன மற்றவர்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்புத் துறை, கடற்படை, காவல்துறை அடங்கிய மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் தேடுதல் பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

ராஜ்பாரி மாவட்ட நிர்வாக அதிகாரிகளை தொலைப்பேசியில் அழைத்த வங்கதேச பிரதமர் தாரிக் ரஹ்மான், நிலைமையைக் கேட்டறிந்ததாகவும், விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Bus falls into river in Bangladesh! 23 dead; many missing!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.