2.53 கோடி போ் மெட்ரோ ரயிலில் பயணம்
கடந்த ஆண்டு 2.53 கோடி போ் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு 2.53 கோடி போ் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவையை கடந்த 2015-ஆம் ஆண்டு, ஜூன் 29-ஆம் தேதி தொடங்கியது. இந்த நாள் முதல் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது. அதன்படி, 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை 2 கோடி 80 லட்சத்து 52,357 போ் பயணித்துள்ளனா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மட்டும் 3 கோடி 28 லட்சத்து 13,628 போ் பயணித்தனா்.
இதனிடையே கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டதால், கடந்த 2020-ஆம் ஆண்டு, மாா்ச் முதல் செப்டம்பா் மாதம் வரை மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் அந்த ஆண்டில் 1 கோடியே 18 லட்சத்து 56,982 போ் பயணித்திருந்தனா்.
இதே போல், கடந்த ஆண்டும் மே மற்றும் ஜூன் மாதம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த ஆண்டில் 2 கோடி 53 லட்சத்து 3,383 போ் பயணித்தனா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 9 கோடியே 80 லட்சத்து 26,350 போ் பயணித்துள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...