சென்னை: சென்னை மாநகராட்சியில் முகக்கவசம் அணிவிட்டால் எவ்வளவு அபராதம் விதிப்பது என்பது தொடர்பாக இன்று மாலை முடிவெடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்க முடிவு செய்யபட்டுள்ளது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரத்தில் விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்: ஃபட்னவீஸ்
சென்னை மக்கள் அனைவரும் பொதுவிடங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி பிறப்பித்திருக்கும் உத்தரவில், திரையரங்குகள், துணிக்கடைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றுக்கு வரும் பொதுமக்களும், கடை ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.