சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆவடியில் கடனைத் தராதவர் அடித்துக் கொலை!

ஆவடியில் கடனை திருப்ப கொடுக்காததால் இரும்பு கம்பியால் அடித்து வாலிபரை கொன்ற மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :3 ஜூன் 2022, 9:34 am

DIN

ஆவடி: ஆவடியில் கடனை திருப்ப கொடுக்காததால் இரும்பு கம்பியால் அடித்து வாலிபரை கொன்ற மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஆவடி, கவுரிபேட்டை, கம்பர் தெருவை சேர்ந்த மனோஜ் என்ற மோகன்குமார் (27). இவர் டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மனோஜ், ஆவடி புதுநகரை சேர்ந்த பிரபு என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். 

பின்னர் அதனை பலமுறை பிரபு கேட்டும் மனோஜ் கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை மனோஜ் டிராக்டரை ஒட்டிக்கொண்டு ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பிரதான சாலை வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது பிரபு, தனது நண்பர்கள் சதீஷ், பிரான்சிஸ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து டிராக்டரை வழிமறித்து உள்ளார். 

பின்னர் பிரபு பணத்தைக் கேட்டு மனோஜிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் பிரபு மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரும்பு கம்பியால் மனோஜை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் தலையில் பலத்த காயத்துடன் பலியானர். 

இதனை பார்த்த மூவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி தலைமறைவானார்கள். தகவலறிந்து ஆவடி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கம் தலைமையில் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து பிரபு மற்றும் நண்பர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.