சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 34.22 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார

News image
மத்திய சதுக்கத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated On :30 மார்ச் 2022, 10:15 am

DIN

சென்னை மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 34.22 கோடி செலவில் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (30-03-2022) சென்னை சென்ட்ரல் பகுதியில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத் தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்பு திட்டமான மத்திய சதுக்கத் திட்டத்தின் கீழ், 34.22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் மற்றும் சுரங்க நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் இன்று திறந்து வைக்கப்பட்ட மேம்பாட்டு பணிகளின் சிறப்பம்சங்கள்:

அழகுபடுத்தப்பட்ட நில மேம்பாட்டு வசதிகள் திறந்த வெளிப்பகுதி, நடந்து செல்பவர்களுக்கு பாதுகாப்பாகவும் வசதியாகவும் மேம்படுத்தப்பட்டு மரங்கள், புல்வெளி மற்றும் அழகிய தாவரங்களுடன் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும், வண்ண விளக்குகளுடன் கூடிய நீரூற்றுகள், நடைபாதையில் டென்சைல் கானோபி, பர்கோலாஸ் மற்றும் கிரைனைட் இருக்கைகள், நடைபாதையை ஒட்டி வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் பாதைகளும், கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாட்டுப் பணிகள் சுமார் ரூ. 12.49 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Story image

சுரங்க நடைபாதை

சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் முன்பகுதியில் பல்லவன் சாலை பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பிற்கு குறுக்கே பாதசாரிகள் பாதுகாப்பாக செல்லும் வகையில் சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அனைத்து வகையான பயனாளிகளும் பயன்பெறுமாறு மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளும் நிறுவப்பட்டுள்ளன. ஏற்கனவே பூந்தமல்லி நெடுஞ்சாலையின் குறுக்கே அமைந்துள்ள சுரங்க நடைபாதையுடன் இவை ஒருங்கிணைக்கப்பட்டு, பழைய சுரங்கப்பாதையையும் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தேவையான மின்விளக்குகள் மற்றும் ஒளிரும் வழிகாட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த சுரங்க நடைபாதை- சுமார் ரூ. 21.73 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.