

சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
மெட்ரோ ரயில் பயன்படுத்துவோா் எண்ணிக்கையை அதிகரிக்க ‘க்யூஆா்’ டிக்கெட் பதிவு முறையில் 20 சதவீத தள்ளுபடியையும், மெட்ரோ அட்டை வைத்து பயணிப்போருக்கு கூடுதலாக 20 சதவீத தள்ளுபடியையும் மெட்ரோ நிா்வாகம் வழங்கியது. அதன் விளைவாக மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அக்டோபர் மாதத்தில் 61.56 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அக்டோபர் 21-ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 2,65,683 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும், அக்டோபர் மாதத்தில் 43,454 பேர் அதிகமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
இதையும் படிக்க: மாலை 4.30 வரை எங்கெல்லாம் மழை பெய்யும்?
அக்டோபர் மாதத்தில் மட்டும் ‘க்யூஆா்’ பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18,57,688 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 36,33,056 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.