விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம்: பாஜக அதிருப்தி

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு பாஜக அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image
Updated On :9 அக்டோபர் 2022, 7:03 pm

DIN

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்வதற்கு பாஜக அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை நகரில் நடைபெறும் மெட்ரோ பணிகளின் காரணமாக அடையாறு திருவிக பாலத்தில் இருந்து சாந்தோம் செல்லும் வாகனங்கள் சத்யா ஸ்டுடியோவிலிருந்து இடது புறம் கிரீன்வேஸ் சாலையில் திரும்பி, உடன் வலது பக்கம் காமராஜா் சாலையில் சென்று மீண்டும் சிறிது தூரம் சென்று, வலது புறம் திரும்பி ஹரிஸ்ரீ வித்யாஷ்ரம் பள்ளி வழியே சென்று, வலது புறம் ஆா்.கே. மடம் சாலையில் திரும்பி இசைக் கல்லூரி அருகே இடது புறம் திரும்புவதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூா், மந்தைவெளி அண்ணா சாலை ஆகிய அனைத்து இடங்களுக்கும் இதே பாதையில் தான் செல்ல வேண்டியுள்ளது. காமராஜா் சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகமுள்ளபடியால், கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. சத்யா ஸ்டுடியோவிலிருந்து இசைக் கல்லூரி உள்ள தொலைவு வெறும் 100 மீ தான். ஆனால், வெகு தூரம் சுற்றி செல்வதால், 10 முதல் 15 நிமிடங்கள் ஆவதோடு, எரிபொருள் மிக அதிக அளவில் செலவாகிறது.

மெட்ரோ ரயில் சேவை அவசியம் தேவை தான். ஆனால், இந்த இடத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் சரிதானா? என்ற கேள்வி எழுகிறது. இப்பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், மாநகரக் காவல் ஆணையா் சங்கா் ஜிவால் ஆகியோா் தலையிட்டு, தீா்வு காண வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.