உடல் எடை குறைப்பு சிகிச்சையில் மேலும் 3 மருந்துகளைப் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பால் (சி.டி.எஸ்.சி.ஓ.) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
‘ஆர்லிஸ்டாட் (Orlistat)’, ‘டிர்ஸெபாடைட் (Tirzepatide)’, ‘செமக்லூடைட் (Semaglutide)’ ஆகிய மூன்று மருந்துகளை மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் மட்டும் பயன்படுத்தவும் அவற்றை சில்லறை வணிகத்தில் விற்கவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் செவ்வாய்க்கிழமை(மார்ச் 17) தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், ஆஸெம்பிக் (Ozempic) மற்றும் மௌஞ்ஜாரோ (Mounjaro) ஆகிய இரு மருந்துகளும் உடல் எடை குறைப்பு சிகிச்சையில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மருந்துகள் என்று குறிப்பிட்ட அவர், ஸ்டீராய்டுகளை மருத்துவப் பரிந்துரையின்றி தன்னிச்சையாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் அவற்றின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘சிறப்பு மருத்துவ பயன்பாட்டுக்கான உணவு’ என்ற பிரிவின்கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஊட்டச்சத்து மருந்துகள் போன்றவற்றை விற்கும்போது, அந்தப் பொருள்களில் கண் பார்வைக்கு தெளிவாகத் தெரியும்படி ‘மருத்துவப் பரிந்துரையின்பேரில் மட்டுமே இதனைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்பதை பதிவிடுவதும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
Summary
Apex drug regulator CDSCO has approved three drugs -- Orlistat, Tirzepatide and Semaglutide -- for weight loss treatment in the country to be sold in retail on the prescription of a doctor, Minister of State for Health Anupriya Patel said on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நோயற்ற மனிதன்; போரற்ற உலகம்!

கேரள பட்டாசு வெடி விபத்து: மேலும் சில உடல் பாகங்கள் கண்டெடுப்பு

சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு!

உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்! எப்படி செய்வது?
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


