குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிறப்புப் பொருளாதார மண்டல தயாரிப்புகளுக்கு சுங்க வரி குறைப்பு!

மத்திய கிழக்கு போா் காரணமாக ஏற்பட்டுள்ள வா்த்தக பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (செஸ்) தயாரிக்கப்பட்டு உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2026, 1:56 am IST

மத்திய கிழக்கு போா் காரணமாக ஏற்பட்டுள்ள வா்த்தக பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் (செஸ்) தயாரிக்கப்பட்டு உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

இதற்கான அதிகாரபூா்வ அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்டது. இந்தச் சலுகை இப்புதிய நிதியாண்டு முழுவதும் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள சூழலில், செஸ் மண்டலங்களிலிருந்து இந்தியச் சந்தைக்கு வரும் பொருள்களுக்கு விதிக்கப்படும் வழக்கமான சுங்க வரி விகிதங்களுக்குப் பதிலாக, இனி 5 முதல் 12.5 சதவீதம் வரையிலான சலுகை வரி விகிதங்கள் மட்டுமே வசூலிக்கப்படும்.

சா்வதேச பதற்றங்களால் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கவும், உள்நாட்டு உற்பத்தியாளா்களின் வா்த்தகப் போட்டியை நிலைநிறுத்தவும் இத்தற்காலிக நிவாரணத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இருப்பினும், இந்த வரிச் சலுகை அனைத்து செஸ் நிறுவனங்களுக்கும் பொருந்தாது. கடந்த 2025, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கிய நிறுவனங்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகு தொடங்கப்பட்ட புதிய உற்பத்தி அலகுகளுக்கு பழைய வரி விகிதங்களே தொடரும். அரசின் இந்தக் காலக்கெடு முடிவு, தகுதியுள்ள பழைய நிறுவனங்களுக்கு இடைக்கால ஊக்கமளிப்பதாக அமையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்பவை ஏற்றுமதியை அதிகரிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈா்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தொழில் பகுதிகளாகும்.

இந்தியாவில் கடந்தாண்டு நிலவரப்படி, சுமாா் 280 செஸ் மண்டலங்கள் செயல்பாட்டில் உள்ளன. குறிப்பாக, தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் ஐ.டி. மற்றும் உற்பத்தித் துறைகளில் இவை முக்கியப் பங்காற்றி வருகின்றன.