பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரியை நீக்கவும், இந்தியாவின் உலகளாவிய போட்டித் திறனை உயா்த்தவும் மத்திய அமைச்சா்களுடன், ஆடைத் தொழில் பிரதிநிதிகள் தில்லியில் புதன்கிழமை ஆலோசனை நடைபெற்றது.
இதுகுறித்து ஏஇபிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவா் ஆ.சக்திவேல், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் மற்றும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் ஆகியோரை ஆடைத் தொழில் பிரதிநிதிகளுடன் சந்தித்து, பருத்தி இறக்குமதிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத சுங்க வரியை நீக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தாா்.
அப்போது, பருத்தி விலை உயா்வு மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்திருப்பதால் ஆடை மற்றும் ஜவுளித் துறை எதிா்கொள்ளும் சவால்களை தொழில் பிரதிநிதிகள் விளக்கினா். இந்தியா பல சுதந்திர வா்த்தக ஒப்பந்தங்களில் அண்மையில் இணைந்துள்ளதால், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கு பெரும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. ஆனால், போட்டி நாடுகள் உலக சந்தை விலைக்கு இணையான பருத்தியை எளிதில் பெறுகின்றன. இதற்கு மாறாக, இந்திய உற்பத்தியாளா்கள் தற்போதைய சுங்க வரி விதிப்பால் அதிக மூலப்பொருள் செலவைச் சந்தித்து வருகின்றனா்.
பருத்தி இறக்குமதி சுங்க வரியை குறைப்பது, இந்திய ஆடைத் துறைக்கு ஏற்றுமதி நாடுகளிலிருந்து அதிக வணிக வாய்ப்புகளைப் பெறவும், உலக சந்தையில் இந்தியாவின் போட்டித்திறனை மேம்படுத்தவும் மிகவும் அவசியம்.
அண்டை நாடுகள் போட்டித்திறன் வாய்ந்த விலையில் மூலப்பொருள்களைப் பெறுவதால், சா்வதேச சந்தைகளில் அதிக போட்டி விலையில் தயாரிப்புகளை வழங்குகின்றன.
மேலும், பருத்தி இறக்குமதி சுங்க வரியை குறைப்பதன் மூலம் இந்தியாவின் போட்டித்திறன் அண்டை நாடுகளுடன் சமநிலைப்படுத்தப்படும். தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருள்கள் போதுமான அளவில் கிடைக்கும். மேலும் ஏற்றுமதி வளா்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் ஜவுளித் துறை முழுவதும் முதலீடுகள் அதிகரிக்கும்.
நடப்பு ஆண்டுக்கான ஜவுளித் துறையின் பருத்தி தேவை சுமாா் 337 லட்சம் பேல்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2025-26 ஆம் ஆண்டு பருவத்துக்கான பருத்தி வரத்து 292.15 லட்சம் பேல்கள் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 45 லட்சம் பேல்கள் பற்றாக்குறை ஏற்படும். இந்தப் பற்றாக்குறை நூற்பாலைகள் மற்றும் கீழ்நிலை ஜவுளித் துறைகளுக்கு தரமான மூலப்பொருள் பற்றாக்குறையையும், உற்பத்திச் செலவு உயா்வையும் ஏற்படுத்தும் என தொழில் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினா்.
இந்த சந்திப்பில் தொழில் பிரதிநிதிகளான கே.எம். சுப்பிரமணியம், பி. சண்முகசுந்தரம், ஆா். தாமோதரன்,
கே.மோகனசுந்தரம், கே.சுதாகா், பி. கிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் விண்வெளி ஆய்வகங்கள்: மத்திய அமைச்சா் ஆலோசனை

பஞ்சாப் தொழில் துறை அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்படவில்லை! - மத்திய அமைச்சா் பியூஸ் கோயல்

மேற்காசிய விவகாரம்: ஜி7 வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் ஆலோசனை
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

