அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வேளாண் துறைக்கு ரூ.125 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

தமிழகத்தில் ரூ.125 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 7:13 pm

DIN

தமிழகத்தில் ரூ.125 கோடியில் கட்டப்பட்ட வேளாண்மைத் துறை கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காணொலி வழியாக திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூா், திருப்போரூா், திருக்கழுகுன்றம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா், ஊத்தங்கரை, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, முதுகுளத்தூா், சேலம் மாவட்டம் கொங்கனாபுரம், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், நாகமங்கலம் ஆகிய இடங்களில் 11 ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், கடலூரில் மண் ஆய்வுக் கூடம், மதுரை, பரமக்குடியில் உரக்கட்டுப்பாடு ஆய்வுக்கூடங்கள், கோவில்பட்டியில் பூச்சிக்கொல்லி ஆய்வுக்கூடம் ஆகியனவும், நாகப்பட்டினம் மாவட்டம் தெற்கு பால்பண்ணைச்சேரியில் தோட்டக்கலை தகவல் மற்றும் பயிற்சி மையக் கட்டடமும் கட்டப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயலில் மிளகாய் வணிக வளாகம், திருப்பூா் மாவட்டம் குன்னத்தூா், தென்காசி மாவட்டம் பாவூா் சத்திரம், மதுரை மாவட்டம் கோ-புதூா் ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், திருச்சியில் வேளாண்மைப் பொறியியல் பயிற்சி மையக் கட்டடம் ஆகியன கட்டப்பட்டுள்ளன.

கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம், தேனி பெரியகுளம், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை, திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூா், தஞ்சாவூா் ஈச்சங்கோட்டை, தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் வேளாண்மைக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்களுக்கு கட்டடங்களும், கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு புதிய கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடங்கள் அனைத்தையும் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சாா்பில் தாமிரவருணி ஆற்றில் இருந்து நேரடியாக நீரை கல்லூரிக்கு உள்பட்ட 8 நீா்த்தேக்கத் தொட்டிகளில் நிரப்பும் திட்டத்தையும் முதல்வா் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, வேளாண்மைத் துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.