‘அமெரிக்காவை பழிவாங்குவோம்’.. முதல் உரையில் மோஜ்தபா கமேனி எச்சரிக்கை!
அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும் என ஈரான் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி...


அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும் என புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஈரான் உச்சத்தலைவர் மோஜ்தபா கமேனி முதல் உரையில் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் அணுஆயுத கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் சேர்த்து கடந்த பிப். 28 ஆம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் சௌதி, குவைத், துபை உள்ளிட்ட நகர்கள் மீதும் ஈரான் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் ஏவி கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது.
இந்தத் தாக்குதலின் முதல்நாளான பிப். 28 ஆம் தேதியே ஈரானின் மதகுரு அலி அயத்துல்லா கமேனி உள்பட ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
கமேனி மட்டுமின்றி, அவரது மனைவி, மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். மினாப் நகரில் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 150 க்கும் மேற்பட்ட மாணவிகளும் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
அதன்பின்னர், ஈரானின் புதிய உச்சத் தலைவராக மறைந்த அலி அயத்துல்லா கமேனியின் இரண்டாவது மகன் மோஜ்தபா கமேனி, ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உச்சத்தலைவராகப் பொறுப்பேற்றப் பின்னர் மக்கள் முன்னிலையில் தோன்றாமல் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி, முதல்முறையாக ஈரான் மக்களுக்கு தனது உரையை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கை செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் பகுதியில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட வேண்டும். இல்லையென்றால் அவைத் தாக்கி அழிக்கப்படும். அமெரிக்காவுக்கு ஆதரவளிக்கு மத்திய கிழக்கில் உள்ள அண்டை நாடுகள் மீதான தாக்குதலும் தொடரும். ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டுதான் இருக்கும்.
போரில் ஈரான் ஒருபோதும் பின்வாங்காது. அயத்துல்லா அலி கமேனிக்கு மட்டுமின்றி போரில் உயிர்நீத்த ஒவ்வொருவருக்காகவும் அமெரிக்காவை நாங்கள் பழிவாங்குவோம். முழுவேகத்துடன் போரில் முன்னேறுவோம்” என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மோஜ்தபா கமேனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...