

சென்னை அம்பத்தூர் பகுதியில் திடீரென வானில் தெரிந்த வானவில்லால் மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.
பல்வேறு பரபரப்புகளுக்கு மத்தியில் வாழும் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவதில் இயற்கை தவறுவதே இல்லை. அந்த வகையில் பரபரப்பான சென்னையில் திடீரென தோன்றிய வானவில் மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படிக்க | துணிவு படப்பிடிப்புக்காக தாய்லாந்து பறந்த நடிகர் அஜித்
சென்னையை அடுத்த அம்பத்தூர் எஸ்டேட் பகுதி சனிக்கிழமை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆங்காங்கே இலேசான மழைத்தூரல் ஏற்பட்ட நிலையில் வானில் திடீரென வானவில் தோன்றியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் அதனை புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு சென்னையில் தோன்றிய வானவில்லால் மக்கள் ஆச்சர்யமடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.