துணிவு திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்குமார் தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரின் கூட்டணி இணைந்துள்ள படம் துணிவு.
இதையும் படிக்க | நயன்தாரா காதல் கதை: டீசரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்!
இந்தப் படத்தில் அஜித்தின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஏற்கெனவே இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நடிகர் அஜித்குமார் பங்குபெறும் காட்சிகளைப் படமாக்க படக்குழு தாய்லாந்தில் முகாமிட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் அஜித்குமார் சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டி பாங்காக் புறப்பட்டு சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட அவரது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோகன்லால் மகளின் துடக்கம் திரைப்பட டிரைலர்!

உதயநிதி கைது! காவல் வாகனத்தில் தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்!

ஆடிப்பெருக்கு: மகாதானபுரம் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது - நேரலை!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



