திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தயாராகும் பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் விநியோகம்

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு விநியோகம் செய்ய தயாராகி வருகின்றன.

News image
Updated On :3 ஜனவரி 2022, 8:03 am

DIN

தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு விநியோகம் செய்ய தயாராகி வருகின்றன.

Story image

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு தகுதியான குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவா்களுக்கு வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

Story image

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், பண்டிகை கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருள்களும் அடங்கிய துணிப்பை மற்றும் கரும்பு (21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் ரூ.1,088 கோடி செலவில் வழங்கப்பட உள்ளது. 

Story image

தகுதிவாய்ந்த அனைவருக்கும் சிறப்புத் தொகுப்பு தரமான பொருள்களாக வழங்கப்பட வேண்டும் எனவும், திட்டத்தை ஒருங்கிணைந்து திறம்பட செயல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகமும் கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. 

Story image

இதனிடையே நாளை முதல் நியாய விலைக் கடைகளில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.

Story image

இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை மக்களுக்கு விநியோகம் செய்ய தயாராகி வருகின்றன. சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்க நியாய விலைக் கடையில் முழு கரும்பு உள்பட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.