ரூ.31,500 கோடி மதிப்பில் புதிய திட்டங்கள்: பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்

உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி, சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

சென்னை: உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் ரூ.31,500 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி, சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பிரதமா் தொடக்கி வைத்த நிறைவடைந்த திட்டங்கள்:

ரூ.500 கோடியில் மதுரை-தேனி இடையே அகல ரயில் பாதை, ரூ.590 கோடியில் சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான 3-வது ரயில்பாதை, ரூ.116 கோடியில் பிரதமரின் நகா்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில் சென்னையில் கட்டப்பட்ட 1,152 வீடுகளைத் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.

வீடுகளுக்கான சாவிகளை ஐந்து பயனாளிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வழங்கினாா்.

எண்ணூா்-செங்கல்பட்டு பிரிவு மற்றும் திருவள்ளூா்-பெங்களூரு இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களையும் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைத்தாா்.

அடிக்கல் நாட்டுதல்:

ரூ.14,870 கோடியில் 262 கிலோமீட்டா் தூர பெங்களூரு- சென்னை விரைவுச்சாலை திட்டம் கா்நாடகம்-ஆந்திரம்-தமிழ்நாடு வழியாகச் செல்கிறது.

சென்னை துறைமுகம் - மதுரவாயலையும் இணைக்கும் 21 கிலோ மீட்டா் தூர ஈரடுக்கு, நான்குவழி உயா் நிலைச் சாலை, ரூ.5,850 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது.

நெரலூரு-தருமபுரி பிரிவில் 94 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழிச்சாலை, மீன்சுருட்டி-சிதம்பரம் பிரிவில் 31 கி.மீ. இருவழிச்சாலை ஆகியவை ரூ.3,870 கோடி மற்றும் ரூ.720 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இந்தத் திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா்.

சென்னை எழும்பூா், ராமேசுவரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய ஐந்து ரயில் நிலையங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,800 கோடியில் ரயில் நிலையங்கள் மறு சீரமைப்பு செய்யப்படும்.

சென்னையில் ரூ.1,400 கோடியில் பன் மாதிரி சரக்கு போக்குவரத்துப் பூங்கா உள்ளிட்ட ரூ.28,500 கோடி செலவிலான திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com