போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிய இந்தியர் தேர்வு!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் பணிபுரிய ஐஐடி மும்பையில் படித்த தேவேந்திர சிங் சாப்லட் தேர்வு

News image

எலான் மஸ்க்குடன் தேவேந்திர சிங் சாப்லட் - X | Devendra Singh Chaplot

Updated On :14 மார்ச் 2026, 12:16 pm IST

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் பணிபுரிய ஐஐடி மும்பையில் படித்த தேவேந்திர சிங் சாப்லட் தேர்வாகியுள்ளார்.

உலக பணக்காரர்களில் ஒருவரும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், தனது ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் எக்ஸ்ஏஐ நிறுவனங்களில் சூப்பர் இன்டெலிஜன்ஸ் குழுவில் பணியாற்ற, ஐஐடி மும்பையில் படித்த இந்தியரான தேவேந்திர சிங் சாப்லட்டை நியமித்துள்ளார். இவர், எலான் மஸ்க்கின் நேரடி பார்வையின்கீழ் பணிபுரியவுள்ளார்.

தேவேந்திர சிங், 2010-ல் ஐஐடி-ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 25-வது இடத்தைப் பிடித்தவர். மேலும், சர்வதேச கணித ஒலிம்பியாட் (IMO) போட்டியில் சர்வதேச அளவில் 5-வது இடத்தையும் பிடித்தார்.

தொடர்ந்து, ஐஐடி மும்பையில் கணினி அறிவியல் மற்றும் பொறியியலில் பட்டம் பெற்று, கார்னகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் இயந்திரக் கற்றல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார்.

முன்னதாக, மெட்டா நிறுவனத்தின் முகநூலின் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் தேவேந்திர சிங் பணியாற்றியுள்ளார்.

அதுமட்டுமின்றி, தென் கொரியாவில் உள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தலைமையகத்திலும் சுமார் ஒரு வருடம் பணியாற்றியுள்ளார்.

உலகளவில் ஏஐ துறை தொடர்ந்து நாளுக்குநாள் முன்னேறியும், புதுமைகளும் புகுத்தப்பட்டு வரும்நிலையில், தங்களுக்கான நிலையான இடத்தைப் பெற பல்வேறு நிறுவனங்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அவற்றில் ஸ்பேஸ்எக்ஸ், எக்ஸ் (டிவிட்டர்), மெட்டா, கூகுள், ஓபன்ஏஐ ஆகிய நிறுவனங்களும் அடங்கும்.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கும், தனது நிறுவனங்களில் ஏஐ செயல்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் சூப்பர் இன்டெலிஜன்ஸ் என்ற ஒரு குழுவை நியமித்து, அதற்கான ஆள்களை உலகளவில் தேர்வும் செய்து வந்தார்.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கிய பதவி வகித்தவர்களுக்கும் எலான் மஸ்க் அழைப்பு விடுத்து வந்தார். இந்த நிலையில்தான், தேவேந்திர சிங் சாப்லட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Summary

Elon Musk welcomed IIT Bombay graduate Devendra Singh Chaplot to xAI team

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.