வாஷிங்டன்: கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமான 'அடோப்' -இன் தலைமைச் செயல் அதிகாரியாக 18 ஆண்டுகளாகப் பணியாற்றிய தலைவர்களில் ஒருவருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த சாந்தனு நாராயண் தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் ஜோஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் 'அடோப்' நிறுவனம், சாந்தனுவின் விலகலை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் வரை 62 வயதான நாராயண் அந்த பதவியில் நீடிப்பார் என்றும், வாரியத் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளது.
'அடோப்' நிறுவனத்தின் போட்டோஷாப் மென்பொருள் தொடங்கி டிசைன் துறையில் முக்கிய அங்கமாக இருந்து வந்தது. ஆனால் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பம் 'அடோப்' நிறுவனத்தின் பல ஆண்டு கால உழைப்பை சில மாதங்களில் தவிடுபொடியாக்கியது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளில் முதன்மையானவர் சாந்தனு நாராயண். ஆந்திரம் மாநிலத்தை சேர்ந்த இவரது 18 ஆண்டுகால பதவிக்காலம் மென்பொருள் துறையில் புகழ்பெற்றதாகக் கருதப்படுகிறது. 2007 ஆம் ஆண்டின் இறுதியில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து, அவர் வெறும் மென்பொருளின் விற்பனையாளராக மட்டுமில்லாமல், கிளவுட், ஏஐ தொழில்நுட்பத்தில் அதிகார மையமாக மாற்றினார்.
டிசைன் துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் பல புதிய போட்டியாளர்களை உருவாக்கியுள்ளது. இந்த போட்டியை சமாளிக்க அடோப் தனது ஏஐ உத்தியை தீவிரப்படுத்தி வருகிறது. இது மட்டும் அல்லாமல் இந்த துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு கூட்டாண்மைகள் மற்றும் போட்டி நிறுவனங்ளை வாங்கி அதை தனது சேவை தளத்துடன் இணைப்பது வரையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
அடோப் நிறுவனத்தின் லாபம், வருவாய் அனைத்தும் வளர்ச்சி பாதையில் இருக்கும் வேளையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் வருவாய்க்கும் வில்லனாகவே இருந்து வரும் நிலையில், சாந்தனு நாராயண் ராஜிநாமா நிறுவனத்திற்கு பெரும் சிக்கலை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது.
சாந்தனு ராஜிநாமா அறிவிப்பு வெளியானதில் இருந்தே முதலீட்டாளர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. அடோப் பங்கு விலை 7 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளது. அடோப் நிறுவனத்தின் பங்கு விலை இந்த ஆண்டு 22 சதவீதம் சரிந்துள்ளது. 2025-இல் 21 சதவீதம் சரிந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த நிறுவனத்தின் எதிர்காலம் கேள்வியாகியிருப்பது முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 மாதத்தில் மட்டும் 43 சதவீத சரிவை அடோப் பங்குகள் எதிர்கொண்டுள்ளது. இதுவும் தலைமைச் செயல் அதிகாரி மாற்றத்திற்கான முக்கிய காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், அடோப் நிறுவன தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
பணி விலகல் குறித்து ஊழியர்களுக்கு சாந்தனு அனுப்பிய செய்தியில், "நான் பொறுப்பேற்றபோது 7,000-ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 30,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நிறுவன வருவாய் தற்போது சுமார் ஆறு மடங்கு பெருகி 25 பில்லியன் டாலராக (ரூ. 2 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. நாம் இணைந்து சாதித்ததில் பெருமிதம் கொள்கிறேன்." அடோப் நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியை இளம் தலைமுறை தலைவர்களிடம் ஒப்படைப்பதற்கு இதுவே சரியான தருணம். அடுத்த தலைமைச் செயல் அதிகாரிக்கு ஆதரவளிப்பதோடு, நிறுவனத்தின் வாரியத்தலைவராக நீடிப்பேன் என்று சாந்தனு தெரிவித்துள்ளார்.
Adobe CEO Shantanu Narayen's resignation shows that guidance of steady revenue may no longer be enough to satisfy Wall Street without a clear AI agenda.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியன் ஆயில் தென் மண்டல புதிய செயல் இயக்குநா் பொறுப்பேற்பு

இண்டிகோ புதிய சிஇஓ நியமனம்

மெரில் நிறுவனத்தின் முதியோருக்கான சுகாதார முன்னெடுப்பு

தொடர் பிரச்னைகள்... இண்டிகோ சிஇஓ ராஜிநாமா!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


